என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய வானிலை ஆய்வு மையம்"

    • தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது.
    • சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது. ஏரி, குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.

    இந்நிலையில் மலாக்கா ஜலசக்தி பகுதியில் புயல் உருவானது. இது இந்தோனேசியாவில் கரையை கடந்தது. அதன் பின்னர் இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து மலாக்கா ஜலசக்தி பகுதியில் நிலவுகிறது.

    இது கிழக்கு தென்கிழக்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். அது படிப்படியாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.

    இந்த நிலையில் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி நேற்று நள்ளிரவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

    தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு 730 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த புயலுக்கு 'டிட்வா' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் அதற்கடுத்த 48 மணிநேரத்தில் (29-ந்தேதி) வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை அதிகாரி செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் வடகடலோர தமிழக மாவட்டங்களாகும்.

    புயல் உருவாவதால் இன்று (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    29-ந்தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்யும்.

    சென்னை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    30-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 1-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும்.

    • தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது.
    • வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையை ஒட்டிய பகுதிகளில் மேலும் வலுவடைந்து புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதும் ஏமன் நாடு பரிந்துரைத்த 'டிட்வா' என்ற பெயர் புயலுக்கு சூட்டப்பட உள்ளது. வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

    புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கையை ஒட்டி உள்ள கடற்கரை வழியாக நகரும். புயல் உருவாகி தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. புயலால் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.
    • சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது

    மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது. சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் தாழ்வுப் பகுதி நவம்பர் 29ம் தேதி புயலாக மாறக்கூடும் என வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் 'டிட்வா' என பெயரிடப்படும் என்றும் டிட்வா புயலால் தமிழகத்திற்கு நவம்பர் 29,30ம் தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.

    • மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.
    • இன்று காலை 5.30 மணியளவில் சென்யார் புயல் உருவானது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

    * மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.

    * சென்யார் புயல் இன்று காலை 5.30 மணியளவில் உருவானது.

    * அடுத்த 24 மணி நேரத்தில் புயலின் தீவிரத்தை தக்கவைத்து பின்னர் படிப்படியாக வலுவிழக்கும்.

    * சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • தமிழகத்தில் வருகிற 25-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

    இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அந்த வகையில், கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், நாளை தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

    கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும்,

    சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் 22, 23ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வரும் 24ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 25ம் தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தெற்கு மியான்மர், அந்தமான் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும்.

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர புயலாக உருவாகியுள்ளது.

    அந்த வகையில் அந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது. முதலில் இந்த புயல் சென்னையை நோக்கி வருவதாக கணிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னைக்கு அருகே வந்து அங்கிருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா - மசூலிப்பட்டினம் இடைய கரையை கடந்தது. இதையடுத்து தமிழகத்தில் பெய்து வந்த மழை நின்று தற்போது வெயில் அடிக்கத்தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தெற்கு மியான்மர், அந்தமான் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    • நாளை மறுநாள் மாலை அல்லது இரவு மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
    • புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஆழ்ந்த காற்றழுத்தம் நாளை புயலாக வலுப்பெறும் என அறிவித்திருந்த நிலையில் இன்று மாலையே புயலாக வலுப்பெறும் என்றும் ஆழ்ந்த காற்றழுத்தம் புயலாக மாறி வடக்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் காலைக்குள் தீவிரப்புயலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் மாலை அல்லது இரவு மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வருகிற 28-ந்தேதி மாலை மோன்தா புயல் கரையைக் கடக்கும்.
    • சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னமானது நிலை கொண்டுள்ளது.

    சென்னை:

    வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகும் மோன்தா புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம் புயலின் நகர்வை பொறுத்து கரையைக்கடப்பது குறித்து கணிக்கப்படும் என தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், 'மோன்தா' புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அதன்படி, வருகிற 28-ந்தேதி மாலை மோன்தா புயல் கரையைக் கடக்கும். அச்சமயத்தில் 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தற்போது சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னமானது நிலை கொண்டுள்ளது. 

    • ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் புயல்களுக்கு நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களே சூட்டப்படுகிறது.
    • இந்த புயலானது ஆந்திரா நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள்.

    சென்னை:

    இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. கனமழை பெய்த மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    அதன்படி, வருகிற 27-ந்தேதி வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இந்த புயலானது ஆந்திரா நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் சென்னையில் கனமழை பெய்யவதற்கான சாத்திக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவானால் அதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த Montha என்று பெயரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் புயல்களுக்கு நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களே சூட்டப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

    • காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.
    • வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்புள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது. இதன்காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு அந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும்.

    இந்த நிலையில், மேற்கு- மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். மத்திய வங்கக்கடலில் 26-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 27-ந்தேதி சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது.

    அதன்படி, வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இந்த புயலானது ஆந்திரா நோக்கி சென்றாலும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வானிலை அமைப்புகள் மாறிவிட்ட காரணத்தால் பெரும்பாலான இடங்களில் மழை குறைந்து விட்டது.
    • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் எனக் கருதப்பட்ட நிலையில் நிலப்பரப்புக்கு அருகே வரும்போது அது வலுவிழந்து விட்டது.

    இதன் காரணமாக வானிலை அமைப்புகள் மாறிவிட்ட காரணத்தால் பெரும்பாலான இடங்களில் மழை குறைந்து விட்டது.

    இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில் புதிய தாழ்வு பகுதி உருவாகிறது.

    • வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
    • அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

    வங்கக்கடலில் நிலைக்கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    ×